Friday, November 14, 2014




http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=392224&cat=504



நாமக்கல் காவல்துறையில் ஒரு சகாயம்....
நேர்மையான காவல் அதிகாரி உயர் அதிகாரிகளால் பந்தாடப்படும் அவலம்....
நாமக்கல் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் தமிழ்நாடு காவல் துறையில் ஒரு நேர்மையான அதிகாரி, பொதுமக்களால் பெரிதும் நேசிக்கப்படும் அதிகாரி. தமிழ்நாடு காவல் துறையில் லஞ்ச ஒழிப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டு, பல கரை படிந்த ஊழல் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பியவர். அப்படிப்பட்ட காவல் ஆய்வாளரான திரு.பாஸ்கரன் கடந்த 6 மாதங்களுக்கு முன் நாமக்கல் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றார். நேர்மையான அனுகுமுறை, நேரம் தவறாமை, ஊழலற்ற சிறப்பான நிர்வாகம், சுறுசுறுப்பு, துடிப்பான செயல்பாடு மற்றும் பொதுமக்கள் நேரடியாக சந்திக்க வாய்ப்பு போன்ற சிறப்பான செயல்பாட்டால் நாமக்கல் நகர மக்களால் நாமக்கல்லுக்கு கிடைத்த இன்னொரு சகாயம் என பெருமை பேச வைத்த அதிகாரி. இவரால் லஞ்சத்தில் திளைத்த மற்ற காவல் அதிகாரிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாததால், ஊழல் கரை படிந்த உயர் அதிகாரியான காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமாரால் பல வகைகளில் பழிவாங்கப்பட்டு, அவமரியாதை செய்யப்பட்டு, இறுதியாக டம்மி பொறுப்பில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.